
கோலாலம்பூர் மே 13-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ் 3,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இருப்பினும் இந்த தேர்தலில் இளைஞர்களின் ஆதரவை பெரிக்கத்தான் நேஷனல் பெற்றுள்ளது என்று
Institute Darul Ehsan (ide) கழகம் அறிவித்துள்ளது.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மடானி அரசாங்கத்தை ஆதரித்துள்ளனர்.
அதேசமயம் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பெரிக்கத்தான் நேஷனலுக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளனர் அதன் இயக்குநர் கைருல் தெரிவித்தார்.
இம்முறை அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை. இதில் இளைஞர்களும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.
மலேசிய கினி