32 ஆண்டுகளுக்கு பின்னர்
தேர்தலில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு தேசிய முன்னணி வாய்ப்பு வழங்கியுள்ளது.
அந்த வகையில் பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக வேட்பாளர் ராயருக்கு கடுமையான போட்டியை கொடுப்போம் என்று ஐபிஎப் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் சூளூரைத்தார்.
ஜெலுத்தோங் ஜசெக கோட்டை என்பது எங்களுக்கு தெரியும்.இப்போது 500 ஐபிஎப் தொண்டர்கள் ஜெலுத்தோங்கில் களம் இறங்கி உள்ளனர்.
ஜெலுத்தோங் தொகுதியில் வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று டத்தோ லோகநாதன் சூளூரைத்தார்.