
கிள்ளான்,மே13: இராஜா மாஹாடி இடைநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக 17வது ஆண்டாக மீண்டும் டத்தோ தீபாகரன் கருப்பையா அமோக வெற்றியடைந்தார்.
பள்ளியின் நடைபெற்ற அதன் 41வது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெரும் ஆதரவில் டத்தோ தீபாகரன் வெற்றி பெற்றார்.
மிகவும் பரப்பரப்பான சூழலில் சங்கத்தின் தேர்தல் நடைபெற்ற வேளையில் டத்தோ தீபாகரனை எதிர்த்து போட்டியிட்டவர் தாம் வகிக்கும் கிள்ளான் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியையும் தாம் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சியின் செல்வாக்கையும் கேடயமாக பயன்படுத்தி தீபாகரனை வென்றுவிடலாம் என கருதிய நிலையில் தன் சேவையாள் நனிச் சிறந்த பங்களிப்பை இப்பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து செய்து வரும் தீபாகரன் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை மிக எளிதில் தோல்வியடைய செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு தலைவரும் முன்னாள் கிள்ளான் நகராண்மை கழக உறுப்பினரும்,நன்சேவையாளருமான டத்தோ தீபாகரன் தனது சேவையையும் செயல்பாடுகளையும் முன் வைத்து போட்டியிட்ட வேளையில் இப்பள்ளியின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தாம் ஆற்றிய பங்களிப்பு இவ்வெற்றியை தமக்கு அளித்ததாக கூறினார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்பது அரசியல் களம் அல்ல.இங்கு கல்வி,பள்ளி,மாணவர் நலன் உட்பட பல்வேறு சமூக நலன் சார்ந்த கருத்தியலையும் இலக்கையும் முன் வைத்து நாம் ஆரோக்கியமாக நகர வேண்டும் என்பதை மறந்து சிலர் அரசியல் செய்வது ஏற்புடையதில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் சிலரின் கருத்தாக இருந்தது.
இருப்பினும்,தொடர்ந்து தன் மீது நம்பிக்கை வைத்து 17வது முறையாக இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு தலைமை ஏற்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் வழங்கியுள்ள வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்த தீபாகரன் தொடர்ந்து இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தன் சேவையும் பங்களிப்பும் தொடரும் என்றார்.