கோலாலம்பூர், மே 14:
நேற்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து தலைநகரில் மரங்கள் விழுந்த சம்பவங்களில் சேதமடைந்த 10 வாகனங்களில் மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துட் ரவூப் யூசோப்பின் வாகனத்துடன் வந்த புரோட்டான் எக்ஸ்70 காவல்துறை ரோந்து வாகனமும் அடங்கும்.
ஜாலான் பினாங்கில் மரம் விழுந்ததில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு கார்களுடன் ரோந்து வாகனமும் பாதிக்கப்பட்டது என கோலாலம்பூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
bernama