டோஹா, மே 14: பாலஸ்தீனியர்களை படுகொலை செய்வதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அமைதித் திட்டத்திற்கு உடன்பட வேண்டும் என்று வலியுறுத்துவதில் மலேசியா உறுதியாக உள்ளது என்று அவர் சொன்னார்.
இன்று கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் முன்னாள் ஹமாஸ் தலைவர் காலித் மஷால் ஆகியோர் தலைமையிலான குழுவைச் சந்தித்தபோது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அன்வார் தனது ஃபேஸ்புக்கில் இதை பதிவேற்றம் செய்துள்ளார்.
காசாவில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக மனிதாபிமான உதவி, மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய அம்சங்களில் உதவுவதற்கு மேலும் சுறுசுறுப்பான முயற்சிகளை அணி திரட்டுவது உட்பட, ரஃபா மீதான தாக்குதலை நிறுத்துவதில் சர்வதேச அளவில் பங்களிக்க மலேசியா தொடர்ந்து உறுதியளிக்கும் என்றார்.
“எட்டு மாதங்களுக்கு முன்பு மோதல் வெடித்ததில் இருந்து பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.
“கைதிகளை, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை விடுவிக்கவும், அரபு நாடுகள், OIC (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதித் திட்டத்தை ஏற்கவும் ஹமாஸின் விருப்பத்தை மலேசியா பாராட்டுகிறது” என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
bernama