சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் போட்டியிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து சுங்கை பூலோ தொகுதிக்கான வேட்பாளரை கெஅடிலான் கட்சி மறுஆய்வு செய்து வருவதாக அதன் தேசிய துணை தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
இது தொடர்பாக கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் தாம் விவாதிக்கவிருப்பதாக பி. கே.ஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி தெரிவித்தார்.
சுங்கை பூலோ வாக்காளர்களிடம ருந்து கிடைத்த கருத்தினால் வேட்பாளர் மறு ஆய்வு செய்யப்படுகிறாரே தவிர கைரி வேட்பாளராக நிறுத்தப்பட்டது தொடர்பில் இல்லையென அவர் சொன்னார்.