
புத்ரா ஜெயா , மே 14-
ஒரு தலைபட்சமாக மதம் மாற்றம் செய்யப்பட்ட தனித்து வாழும் தாயார் திருமதி லோ சியூ ஹோங்கின் மூன்று பிள்ளைகள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று ஃபெடரல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
புத்ரா ஜெயா ஃபெடரல் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இந்த தீர்ப்பை வழங்கியது.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதியன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது 15 வயது இரட்டையர்கள் மற்றும் 12 வயது மகனின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை ரத்து செய்ய லோவின் மேல்முறையீட்டை அனுமதித்தது.
தனது முன்னாள் கணவரால் ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட தனது மூன்று பிள்ளைகளை மீண்டும் பெறுவதில் தனித்துவழும் தாயார் லோ சியூ ஹோங் கடும் போராட்டத்தை எதிர்நோக்கினார்.
இதனிடையே புத்ரா ஜெயா ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்டு தான் பெரும் மகிழ்ச்சி அடைவதாக லோ சியூ ஹோங் தெரிவித்தார்.
தனது மூன்று பிள்ளைகளும் இஸ்லாம் அல்லாதவர்கள் என்று பெடரல் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருப்பதால் பெர்லிஸ் சமய மன்றம் இனியும் தொந்தரவு செய்யக்கூடாது என்றார் அவர்.
எனது பிள்ளைகள் ஒரு தலை பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதால் நான் பெரும் அவதியை எதிர் நோக்கினேன்.
ஆகவே இனியும் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
மலேசிய கினி