ஷா ஆலம், மே 15: ஜூன் 5 அன்று காலை 9 மணி முதல் சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் (எல்ஆர்ஏ எஸ்எஸ்பி1) பராமரிப்பு மற்றும் கருவிகளை மாற்றும் கட்டம் 1 நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் மற்றும் அப்பணி மாலை 7 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பராமரிப்பு நடவடிக்கையால் பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படும்.
இதனால், மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்கு மையங்கள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்களை ஆயர் சிலாங்கூர் அனுப்பும்.
ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல், நீர் விநியோக முறை சீரான பிறகு, நுகர்வோர் படிப்படியாக நீரைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“பொதுமக்கள் போதுமான தண்ணீர் சேமித்து வைத்திருக்கவும், இடையூறு ஏற்படும் காலம் முழுவதும் தண்ணீரை கவனமாகப் பயன்படுத்தவும் ஆயர் சிலாங்கூர் அறிவுறுத்துகிறது
bernama