1எம்டிபி வழக்கு முடிந்த பிறகு நஜிப்பின் வீட்டுக்காவலை பரிசீலிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்மொழிகிறார்!

டோஹா மே 15-
1MDB ஊழல் வழக்கை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் NAJIB’ஐ வீட்டுக் காவலில் வைப்பதற்கு ஆட்சேபனை ஏதும் தமக்கு இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பான முடிவு மாமன்னர் Sultan Ibrahim எடுக்க முழு உரிமை அவருக்கு உண்டு. ஆனால் பிரதமராக என்னிடம் மாமன்னர் கலந்துரையாடினால் தாம் எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கமாட்டேன்

ஆனால், 1MDB ஊழல் வழக்கின் முழுமையான விசாரணைக்குப் பின் உடனே முடிவெடுங்கள் என தாம் வலியுறுத்துவேன் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் Najib மீதான ஊழல் வழக்கின் விசாரணை முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்குப் பின் மாமன்னர் முடிவு எடுத்தால், முழுமையாக மாம்மன்னரின் முடிவை ஆதரிப்பேன் என பிரதமர் அன்வார் உறுதியளித்தார்.

கட்டார் பயணம் மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புளும்பெர்க் செய்தி நிறுவனத்தில் பொருளாதார கருத்தரங்கில் கேள்விகள் முன்வைக்கப்பட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய கினி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles