லண்டன் மே 16-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இன்று அதிகாலையில் நடந்த ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய மென்செஸ்டர் யுனைடெட் 3-2 என்ற கோல் கணக்கில் நியூகாசலை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் வழி மென்செஸ்டர் யுனைடெட் 57 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் உள்ளது.
முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வாய்ப்பை இழந்த மென்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக் கிண்ண வாய்ப்பையும் பறி கொடுத்துள்ளது.
பிபிசி