ஜொகூர் மாநிலத்தில் உள்ள மூவார் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று மூடா கட்சி தலைவர் சைட் சாடிக் இன்று தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் சைட் சாடிக் 6,953 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இம்முறை இவரை எதிர்த்து மூவார் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் முகமட் ஹெல்மி மற்றும் ஜோகூர் மாநில பாஸ் கட்சி தலைவர் அப்துல்லா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.