அலோர்ஸ்டார், மே 16- சமூக ஊடகத்தில் வெளியான ‘வார்பெர்க் பின்கஸ்
லேகஸி‘ எனும் முதலீட்டுத் திட்டத்தில் கவரப்பட்ட ஆடவர் ஒருவர் பத்து
லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகையை இழந்தார்.
முதலீட்டு மோசடி சம்பவம் தொடர்பில் 57 வயதுடைய ஆடவர் ஒருவர் கூலிம்போலீஸ் நிலையத்தில் கடந்த மே 9ஆம் தேதி புகார் செய்ததாகக் கெடா மாநில வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர்
சூப்ரிண்டெண்டன் லோய் இயோ லிக் கூறினார்.
bernama