கோலாலம்பூர்: மே 16-
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாமன்னர் தம்பதியர் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
கல்வியாளர்களின் தியாகங்களும் சேவைகளும் எப்போதும் நினைவுகூரப்பட வேண்டும்.
ஏனெனில் தேசத்தையும் சமூகத்தையும் வளர்ப்பதில் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று மாமன்னர் தம்பதியர் தங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
பெர்னாமா