வாஷிங்டன்: தற்போதைய சூழலில் பாகிஸ்தானுக்கும் நரேந்திர மோடி போல வலிமையான தலைவர் தேவை என அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானிய தொழிதிபர் சஜித் தரார் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிறந்த சஜித் தரார் 1990-களில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் டிரம்ப்பின் ஆதரவாளர். பாகிஸ்தான் ஆளும் கட்சி மற்றும் தொழிலதிபர்களிடையேயும் தராருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்ற வலிமையான தலைவர் பிரதமர் மோடி. பாகிஸ்தானுக்கும் அவரைப் போன்ற தலைவர் கிடைப்பார் என்று நம்புகிறேன்.
உலகளவில் உள்ள மிக குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவர் மோடி. அவர் இயற்கையில் தலைமைப் பண்போடு பிறந்தவர்
. இக்கட்டான சூழ்நிலையிலும் பாகிஸ்தானுக்கு அரசியல் பயணம் செய்த ஒரே தலைவர் அவர்தான். எனவே, பாகிஸ்தானுடன் மீண்டும் அவர் அமைதி மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The indu times