கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில், தடையை மீறி விடுதலைப் புலிகள் நினைவுதினம் அனுசரிக்கப்படலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாகரன் 2009 மே 19ம் தேதி முள்ளிவாய்க்கால் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போர் நிறைவடைந்தது.
இதில் அப்பாவி தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.