நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள், குடியரசு தினத்தன்று ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகின்றன.
கலை, சமூகப்பணி, அறிவியல், பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அளிக்கப்படுகின்றன.
ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.