
புத்ராஜெயா, மே 17- aதற்போதைய RM1,500ஆக இருக்கும் குறைந்தபட்ச ஊதிய விகிதம் RM2,102 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (Unicef) முன்மொழிவு கவனமாக ஆய்வு செய்யப்படும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறினார்.
வாழ்க்கைச் செலவைக் கையாள்வதில் மடாணி அரசாங்கத்தின் அணுகுமுறை ஊதியம் உட்பட மக்களின் வருமானத்தில் கவனம் செலுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அதை விரிவாகப் பார்த்தால், கட்டமைப்பில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உள்ளது நமக்கு தெரியும்.
ஆனால் முற்போக்கான ஊதிய முறை தேவை, அதன் முன்னோடி திட்டத்தை தொடங்குவோம்.
ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது.
முந்தைய அனைத்து நிர்வாகங்களுடன் ஒப்பிடுகையில், எனது பார்வையில், தற்போதைய நிர்வாகம் ஊதியப் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால் இது ஊழியர்கள், முதலாளிகள், திறன் உட்பட அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கியதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்” என ரஃபிஸி கூறினார்
Bernama