
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே 17-
இனிப்பு பானங்கள் தர நிர்ணய அமைப்புடன் உடல் பருமனை எதிர்த்து போராடுவதற்கான சுகாதார அமைச்சின் முயற்சியை பெரிதும் வரவேற்கிறோம் என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் உடல் பருமன் விகிதங்களை நிவர்த்தி செய்வதற்கு
எதிராக போர் தொடுக்கும் சுகாதார அமைச்சின் இந்த முயற்சியை PRIMAS முழுமையாக ஆதரிக்கிறது.
அதிகப்படியான சர்க்கரை நுகர்வு, குறிப்பாக
இனிப்பு பானங்களுக்கான தர நிர்ணயம்
கணிசமான அளவில் இருப்பதை நாங்களும் உறுதி செய்ய முன் வருகிறோம்.
உணவுப் பழக்கவழக்கங்கள் இனிப்பு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை PRIMAS ஒப்புக்கொள்கிறது.
மலேசியர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு நாங்களும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும்
தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் மிகவும் கவலைக்குரியவை, இதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம்.
அரசாங்கத்தின் முனைப்பான அணுகுமுறை சரியான திசையில் ஒரு படியாகும்.
இனிப்பு பானங்களுக்கு முன்மொழியப்பட்ட தர நிர்ணய முறை வரவேற்கக் கூடியது.
சர்க்கரையைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவதையும் அறிவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு
PRIMAS தனது முழு ஒத்துழைப்பையும் உறுதியளிக்கிறது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.