சியோல்: வடகொரியா நேற்று கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. சமீப மாதங்களாக வடகொரியா தனது ராணுவ திறன்களை விரிவுபடுத்தி வருகின்றது.
ஆயுத சோதனையில் விரைவான வேகத்தை பராமரித்து வருகின்றது. அமெரிக்கா தலைமையிலான விரோத போக்கை சமாளிப்பதற்கு அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அந்நாடு தொடர்ந்து கூறி வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து நேற்று முன்தினம் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
அப்போது இரு நாடுகளில் இருந்தும் சக்திவாய்ந்த போர் விமானங்கள் இயக்கப்பட்டன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இந்த கூட்டு ராணுவ பயிற்சியை பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதிய வடகொரியா நேற்று ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.