புத்ராஜெயா, மே 18 – காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு தென்னாப்பிரிக்கா எடுத்துள்ள முயற்சிளை தாங்கள் வரவேற்பதோடு அம்முயற்சிக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக மலேசியா அறிவித்துள்ளது.
இம்மாதம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தி ஹேக்கின் பீஸ் பேலஸில் நடைபெறும் பொது விசாரணையின் போது கூடுதல் இடைக்கால நடவடிக்கைகளை இஸ்ரேலுக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றம் விதிக்க வேண்டும் என்ற தென்னாப்பிரிக்காவின் விண்ணப்பத்தை மலேசியா வரவேற்பதாக விஸ்மா புத்ரா (வெளியுறவு அமைச்சு) அறிக்கை ஒன்றில் கூறியது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி இதுவரை மூன்று முறை இடைக்கால நடவடிக்கைகளை விதிக்க அனைத்துலக நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா மனு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.