புதுடெல்லி: கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியிருந்தார்.
இந்நிலையில் ராஷ்மிகாவின் அந்தப் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ராஷ்மிகாவின் பதிவைப் பகிர்ந்து , “மக்களுடன் இணைந்திருப்பதும் அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதை விடவும் முற்றிலும் மன நிறைவான விஷயம் வேறொன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.