
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால் டோல் கட்டணம் குறைக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள டோல் சாவடிகளை பராமரிக்கும் நிறுவனங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்படும்.
அதன் பின்னர் டோல் கட்டணம் குறைக்கப்படும் என்று அவர் சொன்னார்.