சேவையை முன்னிறுத்தி போட்டியிடுகிறேன் – வீ.சின்னராஜூ தகவல்!

சுங்கை சிப்புட்,மே18: ம இ கா சுங்கை சிப்புட் தொகுதி தலைவருக்கு போட்டியிடும் தாம் இதுநாள் வரை சுங்கை சிப்புட் தொகுதியில் ஆற்றி வந்த சேவையை முன்னிறுத்தி போட்டியிடுவதாக ஶ்ரீ தாமான் ம இ கா கிளைத்தலைவரான வீ.சின்னராஜூ தெரிவித்தார்.

இத்தொகுதியில் அரசியல் ரீதியாகவும் சமூகவியல் சார்ந்தும் பல்வேறு பங்களிப்பும் சேவையும் செய்திருக்கும் தாம் கல்வி சார்ந்தும் பெரும் பங்காற்றியுள்ளேன்.மக்கள் பணி செய்வதில் பெரும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருக்கும் நிலையில் சுங்கை சிப்புட் தொகுதி ம இ காவில் சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்தி ம இ கா மீது இங்கு வாழ் மக்களின் வலுவான நம்பிக்கையை பெற செய்யவே தொகுதி தலைவருக்கும் தாம் போட்டியிடுவதாக அவர் மேலும் கூறினார்.

கட்டி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வாரியக்குழு தலைவருமான சின்னராஜூ அப்பள்ளியின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தன்னிகரற்ற சேவையை வழங்கியுள்ளார்.அப்பள்ளியின் ஒவ்வொரு மாணவரின் நலனையும் கவனத்தில் கொண்டு பல்வேறு ஆக்கப்பூர்மான பணியை மேற்கொண்டிருக்கும் இவர் அப்பள்ளியின் தனித்துவ அடையாளத்திற்கு இவரும் ஒரு மூலதனமாக திகழ்கிறார்.

அதுமட்டுமின்றி,ஒவ்வொரு ஆண்டும் பள்ளித்தவணைக் காலம் தொடங்கும் போது சுங்கை சிப்புட் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இவரது பங்களிப்பு நனிச் சிறந்தது எனலாம்.மாணவர்கள்,பள்ளிக்கூடம் மட்டுமின்றி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியுரைக்கும் விதமாய் ஆசிரியர் தினத்தை நன்நிலையில் இவ்வட்டாரத்தில் முன்னெடுப்பது தொடங்கி சிறந்த ஆசிரியர்,சிறந்த பெற்றோர்,சிறந்த சேவையாளர்கள் என சமுதாயத்தின் ஆணிவேராக இருக்கும் அனைவரையும் சிறப்பித்து மகிழ்வது இவரது தனித்துவ அடையாளமாகும்.

சுங்கை சிப்புட் தொகுதியில் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் தலைவருமான சின்னராஜூ பொது இயக்கத்தின் வாயிலாகவும் ம இ கா வாயிலாகவும் தனக்கான சேவையை முன்னிறுத்திடும் அதேவேளையில் இம்மண்ணின் பெருமைமிகு அடையாளமாகவும் அவர் திகழ்கிறார் எனலாம்.தொகுதி ம இ கா கிளைத்தலைவர்கள் மத்தியில் நன் மதிப்பையும் ஆதரவையும் பெற்றிருக்கும் சின்னராஜூ தொகுதி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என தொகுதி கிளைத்தலைவர்களும் கருதுகிறார்கள்.

சேவை மனப்பான்புடன்,மனிதமும் அனைவரிடமும் அன்பும் மரியாதையும் கொண்டு பழகிடும் சின்னராஜூ நல்ல தலைமைத்துவ பண்பையும் கொண்டிருப்பதால் இவரது தலைமைத்துவத்தின் கீழ் சுங்கை சிப்புட் தொகுதி ம இ கா மாபெரும் உருமாற்றத்தை நோக்கி முன்னேறும் என்றும் கிளைத்தலைவர்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளதையும் இங்கு காணமுடிகிறது.

சுங்கை சிப்புட் தொகுதி ம இ காவின் எழுச்சிக்கு சின்னராஜூவின் தலைமைத்தும் வழிகோலும் என நம்பிக்கை எழுந்துள்ள நிலையில் தொகுதி மக்களிடையே புதிய நம்பிக்கையையும் வலுவான ஆதரவையும் ம இ கா கொண்டிருக்க இவரது தலைமைத்துவம் ஒரு சிறந்த மூலதனமாகவும் அமையும் என்ற நம்பிக்கையை இங்குள்ள கிளைத்தலைவர்கள் மட்டுமின்றி பொது மக்களிடையேயும் காணமுடிகிறது.

நாளை மே 19ஆம் தேதி நடைபெறும் தொகுதி தேர்தலில் சுங்கை சிப்புட் தொகுதியில் வீ.சின்னராஜூ அத்தொகுதியின் இடைக்கால தலைவர் அஜாட் கமாலுடினை எதிர்த்து போட்டியிடும் வேளையில் சின்னராஜூவிற்கு பெரும் ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles