அஸ்தானா, மே 18-
மத்திய ஆசியாவின் மிகப்பெரிய நாடான கஜகஸ்தானில் புதிய தொழில் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வர்த்தக சமூகம் தொடர்ந்து ஆராய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, எரிசக்தி, கட்டுமானம், சுற்றுலா மற்றும் பயனீட்டுப் பொருட்கள் போன்ற துறைகளில் மலேசியா முன்னுரிமை அளிப்பதாக நிதியமைச்சருமான அவர் கூறினார்.
வர்த்தக சமூகம் வெளிநாடுகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான வசதிகளையும் ஆதரவையும் அரசாங்கம் எப்போதும் வழங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா