செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் மே 21-
செராஸ் கொக்ரேய்ன் ஜாலான் நக்கோடா யூசோப் 1 ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 3
20,000 வெள்ளி மானியம் வழங்கினார்.
இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது என்று ஆலயத் தலைவர் எம். அருள் ஆனந்தன் தெரிவித்தார்.
எச்ஆர்டி திட்டத்தினால் முன்பு கொக்ரோய்ன் பள்ளி அருகில் இருந்த இந்த கோவில் இப்போது ஜாலான் நக்கோடா யூசோப் 1 என்ற இடத்திற்கு மாற்றப்பட்டு பல லட்சம் வெள்ளியில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆலயத்தில் மண்டல அபிஷேக பூசைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளர் மாண்புமிகு சுரேஷ் சிங் ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்தார்.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது
அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சார்பில் 20 வெள்ளி மானியத்தை சுரேஸ் சிங் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தற்போது ஆலயத்தில் சிவன், ராமர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் கட்டப்பட்டு வருகிறது. பக்தர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கும்படி ஆலயத் தலைவர் அருள் ஆனந்தன் கேட்டுக் கொண்டார்.