கோலாலம்பூர் மே 22-
உலக மக்கள் அனைவரும் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அரச வாழ்க்கையில் இருந்து விடுபட்டு துறவம் பூண்ட புத்தர் பெருமான் விட்டுச் சென்ற மனிதநேயத்தை தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்று ஜொகூர் மாநில இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி எம் கண்ணன் தமது விசாக தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அமைதி, மனித நேயம், உயிர்களிடத்தில் அன்பு வைத்தல், மன சாந்திக்கான தியானம், போன்ற பல நல்ல கருத்துகளை நமக்குப் போதித்த தந்தவர் புத்தர் பெருமான் ஆவார்.
இந்த அருமையான தருணத்தில் மலேசியர்கள் அனைவரும் அமைதிக்கும் ஒருமைப்பாட்டு உணர்வுக்கும் உரிய நாளாக இந்த நந்நாளைக் கொண்டாடி மகிழும்படி கண்ணன் தமது வாழ்த்து செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.