சைட் புத்ரா ஜாலான் ரோப்சன் ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் ஆலயம் 50 லட்சம் வெள்ளியில் 108 படிகளுடன் கம்பீரமாக கட்டப்படுகிறது!

செ வே. முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் மே 22-
தலைநகர் சைட் புத்ரா ஜாலான் ரோப்சனில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் ஆலயம் 50 லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டிருப்பதாக ஆலயத் தலைவர் ராஜா புலேந்திரன் தெரிவித்தார்.

இன்னும் மூன்று மாதங்களில் இந்த ஆலயத்தின் திருப்பணி பணிகள் தொடங்கும் என்று அவர் சொன்னார்.

ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தில் 108 படிகளுடன் இந்த ஆலயம் பிரம்மாண்டம் என முறையில் கட்டப்பட இருப்பதாக அவர் சொன்னார்.

ஆலயத் திருப்பணி கட்டடக் குழுத் தலைவராக வழக்கறிஞர் நரசிம்மன், துணை தலைவராக டத்தோ சந்திரகுமணன் மற்றும் செயலாளராக மூர்த்தி ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.இந்த ஆலயத் திருப்பணிக்கு பொதுமக்கள் நன்கொடை கொடுத்து உதவும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இன்று ஆலய வருடாந்திரா வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை எட்டு மணி முதல் பிற்பகல் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றது.

ஆலய தலைமை குருக்கள் பிரம்மஸ்ரீ செந்தூர சர்மா தலைமையில் இன்று நடைபெற்ற ஆலயத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஆலயத் தலைவர் ராஜா புலேந்திரன், துணை தலைவர் மூர்த்தி, பொருளாளர் டத்தோ மணியரசு, கட்டட பட வரைவாளர் திருலோக சந்திரன், கம்போங் பண்டான் ராஜா, ஸ்டார் மணியம், ரேமன் பிகேஆர் உட்பட பலரும் ஆலயத் திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles