பினாங்கு மாநிலத்தில் உள்ள இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளிக்கு செனட்டர் லிங்கேஸ்வரன் 5,000 வெள்ளி நிதியுதவி!

பினாங்கு மே 26-
பினாங்கு மாநிலத்தில் ஜாலான் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தேசிய மாதிரி ராமகிருஷ்ணா தமிழ்ப் பள்ளிக்கு இன்று வருகை புரிந்ததாக செனட்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் (LPS) திரு. ராமகிருஷ்ணன் பள்ளி நிலவரங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

தற்போது 12 வகுப்பறைகளுடன் சுமார் 300 மாணவர்கள் இருப்பதாக .
மேலும் பல மாணவர்கள் இந்த உயர்தர தமிழ்ப்பள்ளியில் சேர்வதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் கூறினார்.

சரியான உள்கட்டமைப்பு மற்றும் பள்ளி உபகரணங்கள் இல்லாததால் தமிழ்ப்பள்ளிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் குறைந்துள்ளது.

2 கூடுதல் வகுப்பறைகளுடன் பள்ளியை மேலும் விரிவுபடுத்த நிதி திரட்டும் பிரச்சாரத்தை பள்ளி நிர்வாகம் தொடங்கி உள்ளது.

இந்த மேம்படுத்தல் திட்டத்திற்கான தற்போதைய மதிப்பீடு சுமார் 4 லட்சம் வெள்ளி ஆகும்.

இந்த நோக்கத்திற்காக நான் ரி.ம 5,000 நன்கொடையாக அளித்துள்ளேன் என்று லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சிக்கு
பங்களிக்க விரும்பும் பொதுமக்கள் திரு.குமாரதிரவத்தை 016-4660053 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles