கோல குபு பாரு, மே 26- கோல குபு பாரு இடைத் தேர்தல் பிரசாரத்தின்
போது மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான இப்ராஹிமின் படத்தை
காட்சிக்கு வைத்த நபருக்கு எதிராக வரும் மே 30ஆம் தேதி இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் குற்றச்சாட்டு கொண்டு
வரப்படவுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவரான பி.ராமசாமி (வயது 66) இன்று நீதிமன்றத்தில்
ஆஜராகவில்லை என்பதால் இந்த விசாரணைக்கான புதிய தேதியை
நிர்ணயிக்கும் படி அரசுத் தரப்பு வழக்கறிஞர் அஸ்மா கேட்டுக்
கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டாக பொறுப்பேற்ற சித்தி
ஃபாத்திமான தாலிப் வரும் மே 30 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட (ராமசாமி) நபரின் மறுஆய்வு மனுவை ஷா ஆலம்
உயர் நீதிமன்றம் மே 23ஆம் தேதி ஏற்றுக் கொண்டது என்பதை இந்த
நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.
ஆகவே, குற்றஞ்சாட்டப்பட்ட அவருக்கு எதிரான குற்றத் தீர்ப்பும் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார்
.
குற்றஞ்சாட்டப்பட்டவர் முன்னிலையில் இந்த வழக்கு வரும் மே 30ஆம்
தேதி நடைபெறும் என்று சித்தி ஃபாத்திமா குறிப்பிட்டார்.
முன்னதாக, ராமசாமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.பவித்ரா
தனது கட்சிக்காரர் எங்கிருக்கிறார் என்பது உறுதியாகத் தெரியவில்லை
என்று நீதிமன்றத்தில் கூறினார்.
bernama