அரசியல் லாபத்துக்காக ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் அண்ணாமலை!

சென்னை: ஜெயலலிதாவை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அண்ணாமலை அவதூறு பரப்புவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெயலலிதா ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர்.

அண்ணாமலை, தனது சொந்த அரசியல் லாபத்திற்காகவும், தமிழ் நாட்டில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles