கோலாலம்பூர் மே 26-
Malaysia Netaji Subhash Chandra Bose Indian Cultural Centre, Brickfields மற்றும் இந்திய தூதரகம் இணைந்து நடத்திய சங்கமம். கலாச்சார உறவுகள் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில்
மாண்புமிகு பி.என். ரெட்டி (மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர்), டத்தோ பி.சகாதேவன் (NLCS நிர்வாக இயக்குநர்), டத்தோ டாக்டர் அட்சயா குமார் (மலேசியா தெலுங்கு சங்கத்தின் ஆலோசகர்), டாக்டர் எஸ். வெங்கட் பிரதாப் (மலேசியா தெலுங்கு சங்கத்தின் தலைவர் ), டத்தோ டாக்டர் ஆர். காந்தாராவ் மற்றும் மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்திய சுதாகரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தெலுங்கு மொழியைப் பாதுகாத்தல் மட்டுமல்ல, மலேசியாவை வரையறுக்கும் கலாச்சார பன்முகத்தன்மையை மதிப்பதும் போற்றுவதும் இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.