
கோலாலம்பூர்:
பத்துமலை முருகன் சிலை முன் அல்-குர்ஆன் படித்த சுற்றுலா பயணி ஒருவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
சுற்றுலா பயணி ஒருவர் பத்துமலை முருகன் சிலைக்கு முன் அல்-குர்ஆன் வசனங்களை படித்த சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலானது.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் துறையின் சமய விவகார அமைச்சர் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தமது செயலுக்காக அந்த ஆடவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்துக்களை புண்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. நான் யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
The star