செ.வே.முத்தமிழ்மன்னன்
சிரம்பான் மே 26-
இன்று ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 26 ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் Jalan Templer, Seremban இல் 250 ஆண்டுகளுக்கு மேல் அருள் பாலித்து வந்த ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.
கல்லு குழி,JKR ஊழியர்களால் முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் அதன் பிறகு இடம் மாற்றம் கண்டு அரசாங்க அனுமதியோடு பல லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டு இன்று சிறப்பாக மகா கும்பாபிஷேகம் கண்டது,
ஆகம முறைப்படி சீரும் சிறப்புமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்திற்கு நீலாய் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ.அருள்குமார் தலைமை ஏற்றார்.
நெகிரி மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரவி, சிரம்பான் நகரான் கழக உறுப்பினர்களும் மற்றும் அன்புள்ள கவிமாறனும் இதில் கலந்து சிறப்பித்தனர்..
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அவர்கள் ஆலயத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்குவதாக மாண்புமிகு அருள்குமார் தெரிவித்தார்.2, 000 க்கு மேற்பட்ட பக்தர்கள் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து சிறப்பித்தனர்.