காளிதாஸ் சுப்ரமணியம்
சுங்கை பூலோ, மே 26-
சிறைக் கைதிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ இரமணன் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் கிட்டத்தட்ட 17.6 சதவீதம் பேர் மீண்டும் மீண்டும் சிறைக்கு தான் வருகின்றனர். தண்டனைக்கு பின் வெளியே செல்லும் போது அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்படுவதில்லை.குறிப்பாக அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.
இதனால் அவர்கள் மீண்டும் தவறு செய்து சிறைக்கு வருகின்றனர்.
இந்நிலை மாற வேண்டும். சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு திருந்தி வாழ வாய்ப்பு வழங்குவதோடு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.