செ வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் மே 26-
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஆதரவோடு தேசிய மின்சார தென்னிந்திய இந்திய பணியாளர்களின் 98 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே மாதம் 22 ஆம் தேதி கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் பெ. சந்திரசேகரன், உபய நாட்டாமை க.பூபாலன், உபய பிரதிநிதிகள் கு.கோவிந்தசாமி, கி. ஜெயா கணேசன் தலைமையில் நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழாவுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தலைமை தாங்கினார்.
கடந்த ஆண்டு எஸ் பி.எம். மற்றும் எஸ்டிபிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற தேசிய மின்சார வாரியத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கடந்த ஆண்டில் பணிவு ஓய்வு பெற்ற 30 உறுப்பினர்கள் சிறப்பு செய்யப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன
சிறப்பு பூஜையுடன் நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழாவில் சுவாமி ஊர்வலமும் இடம்பெற்ற வேளையில் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், கதிரேசன், செயலாளர் சேதுபதி மற்றும் பொருளாளர் டத்தோ பி. அழகன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.