கோலாலம்பூர் மே 26-
கெடா மாநிலத்தில்
ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் துன் டாக்டர் சாமிவேலுவின் உருவச் சிலை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று கிள்ளான் வட்டார பிரமுகர் தொழில் முனைவோர் டத்தோஸ்ரீ மோகன் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வி கற்க நிறுவப்பட்ட ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் இன்று உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகமாக விளங்குகிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ துன் டாக்டர் சாமிவேலு மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியது.இந்நாட்டில் இந்திய சமுதாயமும் கல்வியில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக துன் டாக்டர் சாமிவேலு இந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்க அரும்பாடுபட்டார்.
இன்று ஏராளமான மாணவர்கள் இந்த பல்கலைகழகத்தில் மருத்துவம் உட்பட பல துறைகளில் பட்டம் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
துன் சாமிவேலு இன்று நம்மோடு இல்லை என்றாலும் அவரின் சாதனைகள் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்று டத்தோஸ்ரீ மோகன் தெரிவித்தார்.