கூச்சிங், மே 26-
நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்கலுக்கான \சிறப்பு சலுகையை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. இதில் 4,000 பகுதி நேர ஊடகவியலாளர்களும் அடங்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை கூறினார்.
நாட்டில் ஊடக அங்கீகார அட்டைகளுடன் ஏறத்தாழ 14,000 ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் 4,000 பத்திரிகையாளர்கள் பகுதி நேர பணியாளர்கள் உள்ளதை நான் கண்டேன். அவர்கள் முழுநேர வேலை செய்வதில்லை. அவர்கள் பகுதி நேர வேலை செய்கிறார்கள்.
ஆனால் இந்த ஊடகத் துறையில் எதார்த்தம் என்னவெனில், அவர்கள் எல்லா நேரத்திலும் பகுதி நேரமாக இருக்கிறார்கள். இந்த குழுவை நாங்கள் இப்போது உதவ வேண்டிய ஒன்றாக நான் பார்க்கிறேன் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை கூறினார்.