

கோலாலம்பூர் ஜூன் 2 –
மலேசியா திருநாட்டில் பழமை வாய்ந்ததும் புகழ் வாய்ந்ததுமான கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2012 ஆம் ஆண்டு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது நமது மண
மரபாகும்.
அந்த வகையில் உலக மக்கள் அனைவரூஉ வேண்டுதலையும் முழு முதலாய் நின்று நிறைவேற்றி தந்தருளும் கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் தற்பொழுது மீண்டும் புனரமைக்கப்படுகிறது.
ஆலயத்தின் முகப்பு நுழைவாயில், தூண்கள், 32 விநாயகர் பீடங்கள், மணிமண்டபம் அனைத்தும் கருங்கற்களால் அமைக்கப்பட உள்ளது.
தங்க விமானம் மீண்டும் மெருகூட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.
இதனை முன்னிட்டு இன்று காலை 11. 00 மணிக்கு மேல் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் திருப்பணி தொடக்க பூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது
கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சிவகுமார் ஆகம முறைப்படி பூஜையை நடத்தி வைத்தார்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன், சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் டான்ஸ்ரீ பாலன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், சந்திரசேகரன், நாராயணசாமி, பொருளாளர் டத்தோ அழகன், செயலாளர் சேதுபதி உட்பட தேவஸ்தானத்தின் வாரிய உறுப்பினர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.