
நிபோங் திபால், ஜூன் 13-
பினாங்கு மாநில சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் கெஅடிலான் வேட்பாளர் டாக்டர் ஜோகாரி அரிப்பின் போட்டியிடுகிறார்.
நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக விழாவில் கெஅடிலான் துணை தலைவர் மற்றும் பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி இவரின் பெயரை அறிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் பாஸ் வேட்பாளர் நூர் ஸம்ரி 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இம்முறை சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இடையே கடுமையான போட்டி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.