![](https://thinathanthi.my/wp-content/uploads/2022/11/praba-1.jpg)
பத்து நாடாளுமன்ற தொகுதியில் பத்து பேர் போட்டியிட்டாலும் இறைவனின் அருளால் வெற்றி பெறுவேன் என்று பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் பிரபாகரனை தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பத்து நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றி இருக்கிறேன்.
அந்த வகையில் பத்து தொகுதி மக்களின் ஆதரவோடு வெற்றி பெற முடியும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு ஜாலான் ஈப்போ 4 ஆவது மைல் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்திற்கு வருகை புரிந்த பிரபாகரனுக்கு ஆலயத் தலைவர் சேகரன் மாணிக்கம் சிறப்பு செய்தார்.