பாயான் பாரு நாடாளுமன்ற தொகுதியில்
போட்டியிடும் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்
Sim tzi zee அமோக வெற்றி பெறுவார் என்று பினாங்கு மாநில கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் பாலநம்பியார் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற இவர் தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்கினார்.
அந்த வகையில் இவர் மேலும் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வாக்களித்து வெற்றிபெற செய்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம், டத்தோஸ்ரீ அருணாசலம், டத்தோ மரியதாஸ் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சி ஆகியோரும் முழு ஆதரவு வழங்கினர்.