நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்கும் எல்லா தகுதிகளும் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று அவர் பிரதமராக பதவி ஏற்கும் தருணம் வந்துவிட்டது என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
பிரதமர் பதவிக்காக அவர்கள் அடித்து கொள்கிறார்கள்.
ஆனால் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிகச் சிறந்த பிரதமர் வேட்பாளராக விளங்குகிறார்.
இந்த தேர்தலில் மக்களின் ஆதரவோடு பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
இதனிடையே உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பானுக்கு மக்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும் வகையில் இருப்பதாக அவர் சொன்னார்.