வேறு வழியின்றி பத்து நாடாளுமன்ற தொகுதியில் போட்டிமிடுகிறேன்.
இதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தியான் சுவா கேட்டுக் கொண்டுள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மட்டுமே நான் மதிக்கும் மிகப் பெரிய தலைவர்.
எனக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது. என்னை மன்னித்து விடுங்கள் என்று தியான் சுவா கேட்டுக் கொண்டுள்ளார்
பத்து நாடாளுமன்ற தொகுதியில் கெஅடிலான் வேட்பாளர் பிரபாகரனை எதிர்த்து தியான் சுவா உட்பட மொத்தம் பத்து பேர் போட்டியிடுகிறார்கள்.