நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 24 நாடாளுமன்றம் தொகுதிகளில் 19 தொகுதிகளை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கெஅடிலான் தேசிய துணை தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
சிலாங்கூரில் குறைந்தது 22 நாடாளுமன்ற தொகுதிதளை வெல்ல கடுமையாக உழைத்து வருகிறோம்.
அம்னோ பல அணிகளாக உடைந்து விட்டதால் சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் நூர் ஓமார் தூங்காமல் அழுது கொண்டிருக்கிறார் என்று அவர் சொன்னார்.
விலாயா மாநிலத்தில் 11 நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஜொகூர் மாநிலத்தில் 13 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பக்கத்தான் ஹரப்பான் வெல்லும்.
ஜொகூரில் குறைந்தது 15 தொகுதிகளை வெல்ல நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று அவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.