ஈப்போ பாராட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜசெக தேசிய உதவித் தலைவர் வழக்கறிஞர் எம் குலசேகரன் 5 ஆவது முறையாக வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
2004,2008,2013,2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈப்போ பாராட்டில் குலசேகரன் அமோக வெற்றி பெற்றார்.
இந்த முறையும் வழக்கறிஞர் குலசேகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மைபிபி தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் உட்பட மொத்தம் 4 பேர் ஈப்போ பாராட்டில் போட்டியிடுகிறார்கள்.
இதனிடையே புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் துளசி மனோகரன் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக வெற்றி பெற்று வருகிறது.
அந்த வகையில் துளசி மனோகரனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று வர்ணிக்கப்படுகிறது.