உலக அளவில் மிகவும் பிரபலமான மற்றும் நேர்மையான அரசியல்வாதியாக விளங்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்முறை பேராக் மாநிலத்தில் உள்ள தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகையால் பேராக் மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவாக அலை வீசுகிறது.
பேராக் மாநிலத்தில் 24 நாடாளுமன்றம் மற்றும் 56 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இதில் 15 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் 56 சட்டமன்ற தொகுதிகளில் அதிக இடங்களை பிடித்து பேராக் மாநிலத்தில் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பேராக் மாநிலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.