பள்ளிகளில் ஜாதி வன்முறைகளை ஒழிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கியது நீதிபதி சந்துரு குழு

சென்னை: ஜாதி வன்முறைகளை ஒழிக்க உடனடியாக செய்ய வேண்டியவை, நீண்டகால செயல்திட்டங்கள் என 2 விதமாக பரிந்துரைகளை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருநபர் குழு வழங்கியது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சக மாணவர்களால் மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவமானது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரியில் மாணவர்களிடையே சாதி பிரச்சனை இல்லாத ஒரு சூழல்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருநபர் குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கையில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடைவிதிக்க வேண்டும். பள்ளிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களில் குறிப்பிடும்போதும் ஜாதி அடையாளங்கள் கூடாது.

தனியார் பள்ளிகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதி பெயர்களை நீக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு பரிந்துறைகள் 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles