
ஈப்போ, ஜுன்.19: பேராக் இந்திய பூப்பந்து மன்றம் மிகவும் சிறப்பாக 45 வது ஆண்டாக தேசிய ரீதியிலாக இந்திய விளையாட்டாளர்களுக்காக பூப்பந்து விளையாட்டினை ஏற்று நடத்தினர். இம்முறை 760 இந்திய விளையாட்டாளர்கள் பங்கேற்றனர் என்று பேராக் இந்தி பூப்பந்து மன்றத்தின் தலைவர் லோகநாதன் நாகப்பன் கூறினார்.
இம்முறை 23 பிரிவின் கீழ் விளையாட்டாளர்கள், 10 வயது முதல் 70 வயதிற்கு மேற்பட்டோர் களம் கண்டனர். அடுத்தாண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

இம்முறை வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணம், நினைவுச்சின்னம், பணமுடிப்பு, ரேக்கேட் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இப்போடடியில் நாடு முழுவதுமுள்ள இந்திய பூப்பந்து விளையாட்டாளர்கள் பங்கு பெற்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
வெற்றியாளர்களுக்கு சட்டத்துறை துணையமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன், மலேசிய மண்ணின் கால்பந்து சகாப்தம் டத்தோ எம். கருத்து மற்றும் செல்வகணேசன் ஆகிய பிரமுகர்கள் பரிசுகள் எடுத்து வழங்கினர். இப்போட்டி சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு லோகநாதன் தம் மன்றத்தின் சார் பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.