
பெர்லின் ஜூன் 20-
ஜெர்மன் நாட்டில் நடைபெற்று வரும் யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் குரோசியா 2-2 என்ற கோல் கணக்கில் அல்பானியா குழுவிடம் டிரா கண்டது.
11 ஆவது நிமிடத்தில் அல்பானியா குழுவின் முதல் கோலை லெசி அடித்தார்.
பிற்பகுதியில் குரோசியா குழுவின் முதல் கோலை கிராமெரிக் அடித்தார்.
பின்னர் 76 ஆவது நிமிடத்தில் அல்பானியா தற்காப்பு ஆட்டக்காரர் கெசூலா தன் குழுவிற்கு சொந்தகொலை அடித்துக் கொண்டார்.
கூடுதல் நேரத்தில் அதாவது 95 ஆவது நிமிடத்தில் அல்பானியா குழுவின் இரண்டாவது கோலை கெசூலா அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இறுதியில் ஆட்டம் டிராவில் முடிந்ததால் அல்பானியா வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.