
டில்லி: ஜூன் 24-
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ள நிலையில், 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதல் இரு நாட்களில் புதிய எம்பிக்கள் பதவியேற்கவுள்ளனர். 26ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடக்கிறது.
நடந்து முடிந்த 18ஆவது மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வென்றது.
பாஜகவுக்கு 240 இடங்கள் கிடைத்தாலும் கூட தனிப்பெரும்பான்மை (272) பலம் கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது.
பிரதமராக தொடர்